

ஸ்ரீ ராம ஜயம் என்று எழுதுவதில் சக்தி என்ன? ஸ்ரீ ஆஞ்சனேய பிரபுவை போல உதவக் கூடியவர் யார் உளர் ? அதிலும் "ஸ்ரீ ராமஜெயம்" என்று ராம நாமாவை சிந்தித்தால், அங்கே ஸ்ரீ ஆஞ்சனேய பிரபு சகிதமாக நமது சீதா லக்ஷ்மண ராமச்சந்திர மூர்த்தி பிரசன்னமாகி நமது துன்பங்களுக்கு ஒரு முடிவு கட்டுவார்கள். "ஸ்ரீ ராம ஜெயம்" எனும் ஜென்ம ரக்க்ஷா மந்திரத்தை சிந்தித்தால், எப்பேர்ப்பட்ட முடிக்க முடியாத கஷ்டங்களையும் தீர்த்து வைப்பார் அனுமான். "ராம நாமாவை சிந்தித்தால், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்த பலன் உண்டாகும்" என்று ஈஸ்வரன் கூறுகிறார். "ஸ்ரீ ராமஜெயம்" எழுதுவது ஏன்? ஸ்ரீ ராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கிட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல்களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். ‘ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி ‘மரா' என்றே முதலில் உச்சரித்தார். ‘மரா' என்றாலும், ‘ராம' என்றாலும், பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தானும் தாங்கிக் கொண்டாள். ‘ரமா' என்று அவளுக்கு பெயருண்டு. ‘ரமா' என்றால் ‘லட்சுமி'. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். "ராம" மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி) உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘ரா' என்றால் ‘இல்லை'; ‘மன்’ என்றால் ‘தலைவன்’. 'இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை' என்பது இதன் பொருள். முதன் முதலில் ராமநாமம் எழுதியவர் யார் ? ராமபிரான், ராவணணை போரில் வென்ற செய்தியை, சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடி வந்தவர் அனுமன்தான். அவருக்கு சீதையைக் கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை. வெற்றிக் களிப்பில் தேவியின் முன்னர் பணிந்து அம்மா! என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார். சீதையின் முன் மணலில் ‘ஸ்ரீராமஜெயம்' என்று எழுதிக் காண்பித்தார். அந்தக் குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டார். முதன் முதலில் ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை எழுதியவர் அனுமன்தான்! அன்று முதல் 'லிகித நாமஜெபம்' என்ற பெயரில், ராம நாமத்தை பனை ஓலை மற்றும் காகிதத்தில் எழுதும் பழக்கம் கொண்டனர். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். குறி வைக்கத் தைக்கும் ராமசரம் என்பார்கள். ராமபாணம் எப்படி இலக்கை நோக்கிப் பாயுமோ, அதுபோல ராமநாமம் உங்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வல்லமை கொண்டது. நம்பிக்கை யுடன் பாராயணம் செய்தால் பலன் நிச்சயம். குறைந்தது ஒருநாளைக்கு 108 முறை எழுதுவது அவசியம். சீதையை அசோகவனத்தில் சந்தித்து வந்த அனுமன், ராமனிடம் "கண்டேன் சீதையை" என்று சொல்லியபடி தெற்கு நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். கைகளில் சூடாமணியை பெற்றதும் ராமரின் கண்களில் கண்ணீர் மல்கியது. "பிரபு! தேவி கஷ்டப்படுவதாக எண்ணி நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களின் திருநாமத்தை மறந்தால்தான் கஷ்டம் வரும். பிராட்டியோ எப்போதும் தங்கள் பெயரையே, (ராமநாமம்) ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு கஷ்டம் என்பதே கிடையாது" என்று அனுமன் அவருக்கு ஆறுதல் அளித்தார். ராமர் அவரை ஆரத்தழுவி, "அனுமான்! உன்னிடம் நான்பட்ட கடனை எப்படித் தீர்ப்பேன்?" என்றார். அனுமனின் உடல் அப்படியே சிலிர்த்துப் போனது. "பகவானே! என்ன சொல்லி விட்டீர்கள்? என்னைக் காப்பாற்றுங்கள்!" என்று ராமரின் திருவடிகளில் சரணடைந்தார். அப்போது கருணையுடன் அனுமன் தலையை கோதியபடி ராமர் ஆசி வழங்கினார். குறிப்பு: ஒரு குடும்பம் 1008 முறையாவது ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும். எந்த மொழியிலும் எழுதலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 108 முறை "ஸ்ரீ ராம ஜெயம்" என்று சொல்லி கொண்டே, எழுத வேண்டும். இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்து சொல்லி "ஸ்ரீ ராம ஜெயம்" எழுத சொல்லி, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழி காட்டுங்கள். அவர்களும் இதை எழுதும் போதும், திருப்பணி கைங்கர்யம் செய்யும் போதும் அந்த புண்ணியம் உங்களுக்கும் வந்து சேரும். "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதிய பிறகு அதை இறைவனிடம் சேர்ப்பிக்க எளிய வழி: இன்று பலரும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதினாலும் அதை கோவிலில் போய் சேர்ப்பதில்லை. நீங்கள் ஸ்ரீ ராம ஜெயம் எழுதி ஆலயத்திற்கு அனுப்பினால், அவர்கள் அதை இறைவனிடம் சேர்ப்பார்கள். கோவிலுக்கு அனுப்ப விரும்புவோர் பின்பற்ற வேண்டிய முறை: ஒரு வெள்ளை காகிதத்தில் உங்கள் கோத்ரம், நக்ஷத்திரம், ராசி, பெயர் மற்றும் பிரார்த்தனையை எழுத வேண்டும். பிறகு A4 ஷீட் 10 வாங்கி, அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவ வேண்டும். செல்வ வளம் பெருக, பச்சை நிற எழுத்திலும்; எதிரி பாதிப்பு நீங்க, கண் த்ருஷ்டி விலக, செய்வினை நீங்க, சிகப்பு நிறத்திலும்; சனி தோஷம், தசா புத்தி, நவக்கிரஹ தோஷம் நீங்க, கருப்பு நிறத்திலும்; நோய் விலக, ஆரோக்யம் கைகூட மற்றும் பொது பிரார்த்தனை நிறைவேற, நீல நிறத்திலும் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுத, சிறந்த பலன் உண்டாகும். ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய புனித தாள்களை அனுப்ப வேண்டிய முகவரி: *SRI VISWARUPA HANUMAR TEMPLE* TNHB, Mambakkam Main Road, Sithalapakkam, Chennai - 600126 Cell: 8939466099 நற்பவி சுபமஸ்து * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், Priest and Prasanna Astrologer, Specialist in Black magic REMEDIES CELL : 8939466099 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com * 💐 * #2024_FEBRUARY_16-Panchangam-and-Planetary-position
We hate spam too.