

சோழ மன்னர்கள் போருக்குப் புறப்படுமுன் வெற்றியடைய வணங்கிய தேவி இவள். காசியில் திரிபுர பைரவி படித்துறையில் தரை மட்டத்திற்குக் கீழே பாதாள வாராஹி விளங்குகிறாள். பகலில் இவளை தரிசிக்கமுடியாது. சென்னை மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் மற்றும் பஞ்சமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்புக்கு 9176185316 சோழிங்கநல்லூர் பிரத்யங்கிரா கோவிலில் வாராஹிக்கு சந்நிதி உள்ளது. திருச்சி - திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை வாராஹி என்பர். வாராஹி முகம் அல்ல; வாராஹி யந்திரம் பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும். அந்த தேவியின் உக்கிரம் தணிக்கவே, ஆதிசங்கரர் தேவியின் காதில் ஸ்ரீசக்ர தாடங்கமும், எதிரே கணபதியையும் பிரதிஷ்டை செய்தார். இனி வாராஹி மந்திரம், காயத்ரியைக் காண்போம். (இவற்றை குருமுகமாக உபதேசம் பெற்றே ஜெபம் செய்ய வேண்டும்.) ஷடாட்சரம் (6): ஓம் வாராஹ்யை நம: த்வாதசாட்சரம் (12): ஓம் வ்ரூம்வாம் வாராஹி கன்யகாயை நம: காயத்ரி: ஸ்யாமளாயை வித்மஹே ஹலஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்... இதனைத் தவிர 114 பீஜாட்சரங்கள் கொண்ட மந்திரம் ரஸ்மி மாலாவில் உள்ளது. அபிராமி அந்தாதியில் வாராஹி நாமம் வரும் இரு துதிகள் சிந்திப்போமா- நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை நச்சு வாயகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி சுக நாயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி என்றே செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே. பஞ்சமி, செவ்வாய், ஞாயிறு, வெள்ளி தினங்களில் வாராஹி தேவியைத் துதித்து சாந்தமாய் நலமுடன் வாழ்வோமே. ஸ்ரீ வாராஹி தேவி, ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ர தேவதைகளுள் மிகவும் மேன்மையானவர். அம்பிகையின் மந்திரிகளுள் ஒருவர். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் அருளுபவள். தமது கரங்களில் விவசாயம் சம்பந்தமான தொழில்கள் மேம்பாடு அடைய ஏர் கலப்பையும், உலக்கையையும் ஏந்தியவள். கால கணிதப்படி - வெள்ளைப் பன்றி உருக்கொண்டு இந்த பூவுலகை அரக்கர்களிடமிருந்து மீட்டவள். ஸ்வேத வராஹ கல்பத்தில், வராஹி தேவி வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சாந்திரமான கால கணித முறைப்படி ஆஷாட மாதத்தில் வரும் பஞ்சமி திதி, ஸ்ரீ வாராஹி தேவியை வழிபட உகந்தது. ஆஷாட நவராத்திரியின் ஒன்பது தினங்களின் மத்தியில் அமையும் ஒரு நாள் - நடு நாள் - ஐந்தாம் நாள் - பஞ்சமி திதி - ஸ்ரீ வாராஹி தேவியை வழிபாடு செய்வது வளங்கள் அனைத்தையும் தந்திடும். (ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாய நம:) நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வாராஹி தேவி. மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வாராஹி தேவி. ஸ்ரீ வாராஹியின் பன்னிரண்டு பெயர்களைச் சொன்னாலே அம்பிகை ஸகல கார்ய சித்தியும், அளவற்ற அருளையும் அருளுவாள். 1. பஞ்சமீ 2. தண்டநாதா 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9. வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்து முடித்தபின்தான் ஆவரண பூஜை பூர்த்தியாகும். பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வாராஹி மாலா போற்றுகின்றது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், Priest and Prasanna Astrologer, Specialist in Blackmagic REMEDIES CALL : +91-8939466099 WhatsApp : +91-9176185316 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com #World_renowned_Astrologer_in_India #Best_Astrologer_in_Chennai #near_by_me_astrologer #nearbyme_blackmagic #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2024_JULY_09-Panchangam-and-Planetary-position * 💐 *
We hate spam too.