

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனங்களில், அட்சதை பிரசாதமாக தருவதற்கும், திருமணத்தில் அட்சதை தூவுவதற்கும்... -இதுதான் காரணம்...! திருமணம் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் அரிசியில் மஞ்சள் கலந்து, அட்சதை தயாரித்து, அதைத் தூவி ஆசீர்வாதம் செய்வது வழக்கமாக உள்ளது. யாகங்கள், ஹோமங்கள் ஆகியவற்றிலும் அட்சதை முக்கியமான பொருளாக இடம் பெறுகிறது. அட்சதைக்கு அரிசியை பயன்படுத்துவதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன. சங்க காலத்திற்கு முன்பிருந்தே நம்முடைய வழிபாடு, விழாக்கள் ஆகியவற்றில் அட்சதை பயன்படுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்தல்... திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் மலர் தூவி ஆசிர்வாதம் செய்வதை விட, அட்சதை தூவி வாழ்த்துவது மிகவும் உயர்வானதாகும். அட்சதை இல்லாத பட்சத்தில் மலர்களைப் பயன்படுத்தலாம். சமஸ்கிருதத்தில் 'அக்ஷதம்' என்ற சொல்லுக்கு 'இடிக்கப்படாத' அல்லது 'பாதிக்கப்படாத' என்று பொருள். அட்சதை தயாரிப்பதற்கு முனை உடைபடாத பச்சரிசியை மட்டும் பயன்படுத்துவார்கள். பச்சரிசியோடு, மஞ்சள், பசு நெய் சேர்த்து உருவாக்கப்படுவதற்கே 'அட்சதை' என்று பெயர். வெள்ளை அரிசியில், மஞ்சளும், நெய்யும் சேர்க்கும்போது அதில் தேவதைகளின் அம்சம் நிறைந்து தெய்வீகத் தன்மை காணப்படும். மணமக்கள் மீது தூவுவதன் அர்த்தம்... திருமணத்தின்போது மணமக்கள் மீது அட்சதை தூவுவதால், தேவதைகளே வந்து அவர்களை ஆசீர்வதிப்பதாக அர்த்தம். அரிசி, சந்திரனுக்குரிய தானியமாகும். மஞ்சள், குருவிற்குரிய நிறமாகும். நெய், மகாலட்சுமியின் அம்சமாகும். இவை மூன்றும் சேரும் இடத்தில் சுபிட்சம் இருக்கும். அது மட்டுமின்றி அரிசிக்கு உணர்வுகளையும், சக்திகளையும் ஈர்க்கும் சக்தி உண்டு. ஆன்மிக ரீதியாக அரிசியை உடலுடனும், மஞ்சளை ஆன்மாவுடனும், நெய்யை தெய்வத்துடனும் ஒப்பிடுவார்கள். மணமக்களை வாழ்த்துதல்... உடல், ஆன்மா ஆகியவை தெய்வ சக்தியோடு இணைந்து மணமக்களை வாழ்த்துகிறோம் என்பதைக் குறிக்கவே அட்சதையை பயன்படுத்தி ஆசீர்வாதம் செய்கிறார்கள். திருமாங்கல்யம் அணிவிக்கும்போது அட்சதை தூவுவதால் அங்கு தீய சக்திகள் விலகுகிறது. அட்சதை தெய்வீகத் தன்மை குறையாமல் இருக்கும். அட்சதை என்பது செல்வ வளம், வரம், வம்ச விருத்திக்கு வழிவகுக்கும். *ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் அட்சதையை பூஜை செய்து, மந்திர உரு ஏற்றி, "மந்திராக்ஷதை" (மந்திர அட்சதை)யாக, பிரசாதமாக தருகிறார்கள். இதனால் குருமஹானே நேரடியாக பக்தர்களை ஆசீர்வதிப்பதாக அர்த்தம்.* திருவருளும் குருவருளும் ஒருங்கே கிடைத்திட, நமது ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனத்திற்கு வாருங்கள்...! Call : 8939466099 WhatsApp : +91-9176185316 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், Priest and Prasanna Astrologer, Specialist in Blackmagic REMEDIES CALL : +91-8939466099 WhatsApp : +91-9176185316 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com #World_renowned_Astrologer_in_India #Best_Astrologer_in_Chennai #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2024_JUNE_2-Panchangam-and-Planetary-position * 💐 * @GurujiDrArunRaghavendarPra9802
We hate spam too.