

குறைந்த செலவில் அயோத்தியா மட்டும் செல்ல நினைப்பவர்கள் கவனத்திற்கு... ஒவ்வொரு திங்கள் அன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா ரயில் செல்கிறது. சென்னை எழும்பூருக்கு நண்பகல் 12 மணிக்கு வருகிறது . *ரயில் எண் 22613* RMM AYC புதன்கிழமை காலை 9 மணியளவில் 'அயோத்தியா தாம்' என்ற ரயில் நிலையம் இறங்கவும். அயோத்தியா கன்டோன்மென்ட் கடைசி ரயில் நிலையம் இறங்கினால், 15 km மீண்டும் வர வேண்டும். அயோத்தியா தாம் இறங்கி, நேராக சரயு காட் (ராம் காட்) 2 km நடந்துதான் வர வேண்டும். அங்கு குளித்து விட்டு, மீண்டும் வந்த வழியே 1.5 km திரும்பினால், 'அனுமான் காரி' என்னும் அனுமான் காவலாக இருக்கும் கோட்டை கோவிலை அடையலாம். 50 படிக்கட்டுகள் ஏறி ஹனுமான் தரிசனம் செய்து, அங்கிருந்து வெளியே வந்து 500 மீ தொலைவில் உள்ள ஶ்ரீ ராம் ஜென்ம பூமி நுழைவு வாயிலை அடையலாம். பெரிய luggage bag இருந்தால், போலீஸ் checking முன்பே, வலது பாகத்தில் locker அறை உள்ளது. அங்கு உங்கள் பொருட்களை பாதுகாப்பாக (மொபைல், watch தவிர) வைத்து செல்லலாம். உள்ளே சென்றவுடன் இலவச பொருள் வைப்பறை கவுண்டரில் உங்கள் சிறிய bag, hand bag, இடுப்பு belt, mobile, watch முதலியவைகளை வைத்து விட்டு செல்ல வேண்டும். (பொருள் வைக்க குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும்) மீண்டும் உள்ளே பாதையில் சென்றவுடன், ஒருவர் பின் ஒருவர் கணக்கில், இரண்டு வரிசையாக எறும்பு சாரை போல் இடிபாடு இல்லாமல் நடந்து செல்லலாம். 200 மீ நடந்தால், கோவில் முன் மண்டபத்தில் இருந்தே, ஶ்ரீ பால ராமனை தரிசித்து கொண்டே அருகில் செல்லலாம். சுமார் 20 metre தொலைவில் இருந்து ஶ்ரீ ராமனை கண் குளிர தரிசனம் செய்து வெளி வரலாம். பூந்தி அல்லது சர்க்கரை, கற்கண்டு பிரசாதமாக கொடுக்கிறார்கள். வெளி வரும் வழியில் purse, mobile, bag போன்ற பொருட்களைப் பெற்று கொண்டு, நுழைவு வாயிலை அடையலாம். பிறகு மீண்டும் அனுமான் காரி என்னும் கோவில் அருகே வந்து, தசரதன் மாளிகையை தரிசனம் செய்யலாம். இங்கு ஶ்ரீ ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகன் ஆடிப் பாடி விளையாடிய உப்பரிகையைப் பார்க்கலாம். அங்கிருந்து வெளிவந்து வலது பக்கம் திரும்பி 50 மீட்டர் நடந்தால், தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடத்தை தரிசிக்கலாம். பிறகு மீண்டும் தசரதன் மாளிகை வழியாக பக்க வாட்டு சந்தில் நுழைந்து, பின்புறம் சென்றால், ஜனக மஹாராஜா சீதைக்கு சீதனமாகக் கட்டி கொடுத்த மாளிகையைக் காணலாம். வழி எல்லாம் இப்போது அன்னதானம் செய்கிறார்கள். வழியில் எல்லாம் மடம், அறைகள் உள்ளது. முன்பதிவு செய்துவிட்டு செல்லலாம். ஒவ்வொரு புதன்கிழமை இரவும் 11 மணிக்கு அயோத்தியா கன்டோன்மென்ட்டில் இருந்து, சென்னை அல்லது ராமேஸ்வரத்திற்கு ரயில் திரும்புகிறது. *22614 AYY RMM* Lucknow வந்தும் சென்னை திரும்பலாம் சீத்தா ராம் பியாஸ் குஞ் என்ற இடத்தில் தங்கலாம். (செல் 9532065447) சுடுதண்ணீர், கம்பளி, விசாலமான அறைகள் உள்ளது. ஜெய் ஸ்ரீராம் * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், Priest and Prasanna Astrologer, Specialist in Black magic REMEDIES CELL : 8939466099 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com #World_renowned_Astrologer_in_India #Best_Astrologer_in_Chennai #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2024_FEBRUARY_18-Panchangam-and-Planetary-position * 💐 * @GurujiDrArunRaghavendarPra9802 https://www.youtube.com/@GurujiDrArunRaghavendarPra9802 * 💐 * To join with us... https://www.facebook.com/Guruji.Doctor.Arun.Raghavendar?mibextid=ZbWKwL * 💐 * .
We hate spam too.