

சீதையை அசோகவனத்தில் சந்தித்து வந்த அனுமன், ராமனிடம் "கண்டேன் சீதையை" என்று சொல்லியபடி தெற்கு நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். கைகளில் சூடாமணியை பெற்றதும், ராமரின் கண்களில் கண்ணீர் மல்கியது. "பிரபு! தேவி கஷ்டப்படுவதாக எண்ணி, நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களின் திருநாமத்தை மறந்தால்தான் கஷ்டம் வரும். பிராட்டியோ எப்போதும் தங்கள் பெயரையே, ("ராம" நாமம்) ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு கஷ்டம் என்பதே கிடையாது" என்று அனுமன் அவருக்கு ஆறுதல் அளித்தார். ராமர் அவரை ஆரத் தழுவி, "அனுமான்! உன்னிடம் நான்பட்ட கடனை எப்படித் தீர்ப்பேன்?" என்றார். அனுமனின் உடல் அப்படியே சிலிர்த்துப் போனது. "பகவானே! என்ன சொல்லி விட்டீர்கள்? என்னைக் காப்பாற்றுங்கள்!" என்று ராமரின் திருவடிகளில் சரணடைந்தார். அப்போது கருணையுடன் அனுமன் தலையை கோதியபடி ராமர் ஆசி வழங்கினார். இவை அனைத்தும் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதுவதால் ஏற்படும் நன்மைகள். குறிப்பு: ஒரு குடும்பம் 1008 முறையாவது "ஸ்ரீ ராம ஜெயம்" எழுத வேண்டும். எந்த மொழியிலும் எழுதலாம். ஒரு நாளைக்கு 108 முறையாவது, "ஸ்ரீ ராம ஜெயம்" என்று சொல்லி கொண்டே எழுத வேண்டும். இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்து, எடுத்துச் சொல்லி "ஸ்ரீ ராம ஜெயம்" எழுத சொல்லி, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழி காட்டுங்கள். அவர்களும் இதை எழுதும் போதும், திருப்பணி கைங்கர்யம் செய்யும் போதும், அந்த புண்ணியம் உங்களுக்கும் கட்டாயம் வந்து சேரும். "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதிய பிறகு, அதை இறைவனிடம் சேர்ப்பிக்க எளிய வழி: இன்று பலரும் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதினாலும், அதை கோவிலில் போய் சேர்ப்பதில்லை. நீங்கள் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதி "அயோத்தி" ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு அனுப்பினால், அவர்கள் அதை இறைவனிடம் சேர்ப்பார்கள். கோவிலுக்கு அனுப்ப விரும்புவோர் பின்பற்ற வேண்டிய முறை: ஒரு வெள்ளை காகிதத்தில் உங்கள் கோத்ரம், நக்ஷத்திரம், ராசி, பெயர் மற்றும் பிரார்த்தனையை எழுத வேண்டும். பிறகு A4 ஷீட்டில் (10 நம்பர்) வாங்கி, அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவ வேண்டும். செல்வ வளம் பெருக... பச்சை நிறத்திலும், எதிரி பாதிப்பு, கண் த்ருஷ்டி விலக, செய்வினை நீங்க... சிகப்பு நிறத்திலும், சனி தோஷம், தசா புத்தி, நவக்கிரஹ தோஷம் நீங்க... கருப்பு நிறத்திலும், நோய் விலக, ஆரோக்யம் மற்றும் பொது பிரார்த்தனை நிறைவேற... நீல நிறத்திலும், "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதினால், சிறந்த பலன் உண்டாகும்.
We hate spam too.