
சனி பிரதோஷம் *#துன்பம்_போக்கும் #சனி_மஹா_பிரதோஷம...

சனி பிரதோஷம் *#துன்பம்_போக்கும் #சனி_மஹா_பிரதோஷம்.* ☘☘☘☘☘☘☘☘ சனிக்கிழமையில் வரும் பிரதோஷம், "சனி மஹா பிரதோஷம்" என்று அழைக்கப்படுகிறது. ☘ ஒரு சனி பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர். ☘ சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று, ஆயிரம் மடங்கு பலன் தரக் கூடியது இந்த சனி பிரதோஷம். ☘ இன்று ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால், சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு. ☘ சிவபெருமான் தேவர்களைக் காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள், சனிக்கிழமை; நஞ்சை உண்ட நேரம், பிரதோஷ காலம் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை). எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷ நேரம், "சனி பிரதோஷம்" என சிறப்புப் பெறுகிறது. ☘ இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று, “ஓம் ஆம் ஹவும் சவும்” -என்ற மந்திரத்தை, ஒரு சிவாலயத்தில் ஒருமுறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள் மற்றும் அந்தந்த பிறவிகளின் முன்னோர்களது ஏழு தலை முறையினர் -ஆகிய அனைவரது அனைத்து கடன்களும், தோஷங்களும், பிரதோஷ வழிபாட்டால் நீங்கத் துவங்கும். ஏதேனும் பஞ்சமாபாதகங்கள் செய்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட பாவங்களும் அழியத் துவங்கும். ☘ எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது 108 தடவையும், அதிகபட்சமாக 1008 முறையும் ஜபித்து வந்தால் தகுந்த பலன் கிடைக்கும். ☘ ஆகவே, சனிப் பிரதோஷ தினமான இன்றைய நாளில் சிவனாரை, நந்தி தேவரை தரிசிக்கிற வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! ☘ சனிப் பிரதோஷ நாளில், அந்த வேளையில் அதாவது மாலையில் (4.30 - 6) சிவாலயம் சென்று, "நமசிவாய" நாமத்தைச் சொல்லுங்கள். சிந்தையில் தெளிவும், வாழ்வில் நிம்மதியும், நிச்சயம் கிடைக்கும். ☘️ மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ நாட்களில், சிவபெருமானுக்கு வெண் பொங்கலும், சுண்டலும் நிவேதனப் பொருளாகப் படைத்து, ஆராதனைகள் செய்து வழிபட்டபின், பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம், அனைத்து தோஷங்களும் விரைவில் தீரும்.
Subscribe for latest offers & updates
We hate spam too.
