
*கடன் தொல்லை நீக்கி செல்வம் அருளும் திருச்சேறை ரிண...

*கடன் தொல்லை நீக்கி செல்வம் அருளும் திருச்சேறை ரிணவிமோசன லிங்கேஸ்வரர்* இத்திருத்தலம் சாரபரமேசுவரர் கோவில் எனவும் உடையார் கோயிலெனவும் அழைக்கப்படும் இத்தலம் சைவம், வைணவம் ஆகிய மதங்களின் சிறப்பு வாய்ந்த தலமாகும். திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ளது போன்றே ரிண விமோசன லிங்கேஸ்வரருக்கு இங்கு ஒரு தனிச் சன்னிதி உள்ளது. சகல விதமான கடன் தொல்லையில் இருந்தும் நம்மைக் காக்க வல்ல அந்த சர்வேஸ்வரர், ரிண விமோசனர் என்ற பெயரோடு இங்கு எழுந்தருளியுள்ளார். இவரை பிரதிஷ்டை செய்தவர் வசிஷ்ட மகரிஷி.திங்கட்கிழமைகளில் இவரை வழிபடுவது சிறப்பு. ரிண விமோசனருக்கு அபிஷேகம் செய்து தலமரமான மாவிலங்கை இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்யப் படுகிறது. பதினோரு திங்கட்கிழமைகள் தொடர்ந்து அர்ச்சனை செய்ய கடன் தொல்லைகள் முற்றிலும் அகன்றுவிடும். ஸ்வாமி மற்றும் அம்பாள் ஆகியோர் கிழக்கு நோக்கிக் காணப்படுகிறார்கள். தௌமிய முனிவர் மார்க்கண்டேய முனிவரால் வணங்கப் பெற்றது. மார்க்கண்டேய லிங்கம் என்ற சன்னிதியும் ஆலயத்தில் உள்ளது. மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் அதிகாலை நேரத்தில் சூரியனின் கிரணங்கள் செந்நெறியப்பரின் மீது படுகின்றன. அப்போது சூரிய பூஜை நடக்கிறது.✍🏼🌹
Keywords
Subscribe for latest offers & updates
We hate spam too.
