

தனகாரகன் குருவை தனகாரகன் என்று சொல்கிறார்கள். குருவின் வீடு தனுசு, மீனம். குரு உச்சம் பெறுவது கடகம்; நீட்சமடைவது மகரம். கால புருஷ லக்னப்படி தனுசு-9 மற்றும் மீனம்-12ஆவது இடத்தில் இருக்கிறது. மகரம்-10ம் இடமான தொழில் ஸ்தானத்தில், குரு நீசம். எனவே செல்வம் மற்றும் வருமானம் பாதிக்கப்படுகிறது. மகரம், மீனத்திற்கு 11வது இடமாகவும், தனுசுக்கு 2வது இடமாகவும் அமைகிறது. தன ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் நீட்சமடையும் கிரகம், எவ்வாறு தனகாரகனாக அமைய முடியும்? 🙏🙏🙏 சந்திரனையும் சுக்கிரனையும் தனகாரகன் என்று சொல்லலாம். கால புருஷ லக்னப்படி 2ஆவது இடத்தில் (தன ஸ்தானத்தில்) ரிஷபம், அதிபதி சுக்கிரன். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் அடைகிறார். சந்திரன் வீடான கடகத்திற்கு 11ஆவது இடத்தில் (லாப ஸ்தானத்தில்), சுக்கிரன். எனவே சந்திரன் மற்றும் சுக்கிரனை தனகாரகன் எனலாம். 🙏🙏🙏 குருவை, புத்திரகாரகன் எனலாம். 5ஆம் வீடு, புத்திர பாக்கியத்தைக் குறிக்கும். குருவின் வீடான மீனத்திற்கு, 5ஆம் இடத்தில், கடகத்தில் குரு உச்சம். மற்றொரு குரு வீடான தனுசுக்கு 8ஆம் இடத்தில், கடகத்தில், உச்சம். 8ஆம் இடம் என்பது அந்தரங்க வாழ்க்கை. 5ஆம் இடம் என்பது புத்திர பாக்கியம். இந்த இரண்டு இடத்திற்குரிய வீட்டில் குரு உச்சம். யார் எந்த இடத்தில் உச்சம் அடைகிறாரோ, அதற்கேற்ப தான் காரகனாக வருவார். 🙏🙏🙏 புதன், மிதுன ராசியின் அதிபதி. அவருக்கு 4ஆம் இடத்தில் கன்னியில் உச்சம் அடைகிறார். 4ஆம் வீடு என்பது கல்வியைக் குறிக்கும். 🙏🙏🙏 சுக்கிரனுக்கு பொன்னும் பொருளும் தருவதற்கு அதிகாரம் இருக்கிறது. அதேபோல் சந்திரனும் அதிகாரமுடையவராகவும், தனகாரகனாகவும் அமைகிறார். மூன்றாம் பிறைச் சந்திரனை தரிசனம் செய்தால், எல்லா விதமான செல்வமும் சேரும். நிலைக் கண்ணாடி முன் பூக்கள் மற்றும் பழங்களை வைத்து வழிபடும்போது சந்திரனின் அனுக்கிரகம் கிடைக்கும். நிலைக் கண்ணாடியும் சந்திரனும் ஒரே மாதிரியான வேலையைச் செய்கின்றனர். பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால், மகாலட்சுமி மற்றும் பார்வதி தேவியை வழிபடலாம். Fwd-Ed 🙏* 💐 *🙏 #2024trends டிசம்பர் 13 தேதிக்குரிய #கிரகங்களின் நிலை மற்றும் #பஞ்சாங்க குறிப்புகள்.
We hate spam too.