
*ஐப்பசி மாதம்* *இருபத்தொன்பதாம்* *நாள்* *வெள்ளிக்...

*ஐப்பசி மாதம்* *இருபத்தொன்பதாம்* *நாள்* *வெள்ளிக்கிழமை* *பௌர்ணமி நாளில்* *ஐயன்* *சிவபெருமானின்* *லிங்க ஸ்வரூபத்துக்கு* *அன்னாபிஷேகம்* *செய்து போற்றி* *வணங்கிடுவோம்* *வாரீர்* 🌷🌷🌷 ஐப்பசி மாதம் பௌர்ணமி அஸ்வினி நக்ஷத்திரத்தில் வரும் நாள் சிறப்பு பெற்றதே. ஐப்பசி பெளர்ணமியில் சந்திர பகவான் தன் சாபம் முழுமையாக நீங்கப் பெற்று முழு ஒளி வெளிவிடக் கூடிய நாள். நவகிரகங்களில் ஒருவரான சந்திரனுக்குரிய தானியம் அரிசி, அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய பொருள் அன்னம் இரண்டும் சேர்ந்து வருவதால் ஐப்பசி பெளர்ணமி அன்று மட்டும் வருடத்திற்கு ஒருமுறை சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். ஆகம விதிப்படி சிவனுக்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் அனைத்தும் 24 நிமிடங்களில் நிறைவு செய்ய வேண்டும். ஆனால் ஐப்பசி பெளர்ணமி அன்று நடத்தப்படும் அன்னாபிஷேகம் மட்டுமே ஒன்றரை மணி நேரம் சிவ பெருமானின் திருமேனியை அலங்கரிக்கும். நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, வெளியில் காற்று வீசி எரியும் தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதாகும். அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் அன்னத்திற்கு குறைவு என்பதே ஏற்படாது. இதை கண் குளிர தரிசிப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். ஒரு அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்வது கோடி கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த புண்ணிய பலனை தரும். அந்த பலன்களை நாமும் அடைந்திட அன்னாபிஷேகம் கண்டு போற்றி வணங்கிடுவோம். மானுட பிறவி கிடைத்த பயனை அடைந்திடுவோம். 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and #Prasna #Astrologer Specialist in #BLACK_MAGIC REMEDIES Near: Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா #வாராஹி #பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp: +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com #Astrologer_Blackmagic_specialist * 💐 * 💐 * #2024_November_15-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
