https://www.drarunraghavendar.com
918939466099

ஒரு ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடமே 'ராசி' என்று சொ...

ஒரு ஜாதகத்
2024-11-04T09:18:55
Cell8939466099 Guruji Dr Arun Ragavendar
ஒரு ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடமே 'ராசி' என்று சொ...

ஒரு ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடமே 'ராசி' என்று சொல்லப்படும். அந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் கோச்சார சனி சஞ்சரிக்கும்போது, அது 'அஷ்டமத்து சனி' என்று சொல்லப்படும். ஏழரை சனியை விட அஷ்டமத்து சனி அதிக சிரமம் தரும் என சொல்லக் காரணம். சனி அஷ்டமத்தில் வரும்போது சனியின் பார்வை 10-ம் இடம், 2-ம் இடம் மற்றும் 5-ம் இடத்தில் விழுகிறது. அதனால் 10-ம் இடமான தொழில் ஸ்தானம், 2-ம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம் மற்றும் 5-ம் இடமான பதவி, பூர்வ புண்ணிய பலன்களை ஒட்டிய நன்மை தீமை தரும். இந்நிலையில் தொழிலும் வருமானமும், குடும்பமும் வாக்கும் பாதகம் ஏற்பட்டு, நிறைந்த சிரமம் ஏற்படும். தொழிலில் இடையூறுகள் வரும். விரும்பத் தகாத இடத்திற்கு மாற்றம் வரும். தேவையில்லாமல் கடன் வாங்கவும், வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலும் உருவாகும். உடல் நலம் பாதிப்பு அடையும். சாதாரணமாக பேசினால் கூட அது சண்டையில் போய் முடியும். குடும்பத்தில் பிரச்னை வரும். பிள்ளைகள் சொல்படி கேட்க மாட்டார்கள். இப்படி என்னென்ன சொல்லலாமோ அத்தனையும் சொல்லலாம். இதுவெல்லாம் ஒரே சமயத்தில் வரும் என்பதால், அதன் தாக்கம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அஷ்டமத்து சனியின் மீது குரு பார்வை இருந்தால் மட்டுமே பிரச்னைகள் குறையலாம். அதுவன்றி அனைவரும் பிரச்னையை பொறுத்துத்தான் ஆக வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், இதைத் தாங்கும் வலிமையை பெறுவதுதான். அதற்காகத்தான் சில பரிகாரங்கள் சொல்வதுண்டு. எட்டில் வரும் சனி, அஷ்டமத்து சனி; நான்கில் வரும் சனி, அர்த்தாஷ்டம சனி... --இந்த இரண்டு நிலைகளிலும் உள்ளவர்கள் பரிகாரமாக, எவ்வளவு முடியுமோ அதை செய்யலாம். இதை சனியின் காலமான இரண்டரை அல்லது மூன்று வருடங்களும் செய்ய வேண்டும். இந்த அஷ்டமத்து சனி, பெயர்ச்சி ஆன நாளில் இருந்து, இரண்டரை வருடமும் இதனை செய்ய வேண்டும். பரிகார முறைகள் முறையே, தமிழ் மறை பாடல்கள், உணவு முறைகள் ஒழுக்கக் கட்டுப்பாடு, விருட்ச ஸ்பரிசம், ஆலய தரிசனம் மற்றும் சில நடைமுறை பரிகாரம் என்பதாகவே இருக்கும். இந்த வகையில் சில எளிய எட்டுவித பரிகாரங்கள் இங்கு சொல்லப்பட்டு இருக்கிறது. முயற்சி செய்து பலன் பெறுங்கள். வெள்ளை எள்ளை சிவக்க வறுத்து ஆறியதும், மிக்சியில் பொடித்து சாதத்தில் கலந்து சாப்பிடவும். மொத்தமாக பொடித்து வைத்து சாப்பிட வேண்டாம். அன்றைய நாள் தேவைக்கு மட்டும் பொடி செய்து பயன்படுத்தவும். உப்பு சேர்க்க வேண்டாம். சுவை விரும்பிகள் கொஞ்சமாக உப்பு அல்லது வெல்லம் சேர்த்து கொள்ளுங்கள். (இது 2-ம் இட பார்வைக்காக). பஞ்சமுக மூர்த்திகளை வழிபாடு செய்யுங்கள். பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர், பஞ்ச லிங்கம், பஞ்சமுக சுப்ரமணியர் போன்ற திருமூர்த்தங்களை தரிசனம் செய்து, வழிபாடு செய்யுங்கள். (இது 10-ம் இட பார்வைக்காக). சனியுடன் தாயாரும் மனைவியும் (சாயா தேவி, நீலா தேவி) -இருவரும் சேர்ந்திருக்கும் திருத்தலமான திருவானைக்கா சென்று தரிசனம் செய்யுங்கள். இங்குதான் சிவபெருமான் கூலியாக திருநீற்றை கொடுக்க, அங்கு உழைப்பவர்களுக்கு ஏற்ப, அது தங்கமாக மாறியது. இது சனியின் 5-ம் பார்வையை சரி செய்யும். (இது 5-ம் இட பார்வைக்காக) பச்சை பதிகம் எனும் ஞானசம்பந்தர் அருளிய போகம் ஆர்த்த பூண்முலையாள் என்ற திருப்பதிகம் படியுங்கள் அல்லது ஆடியோவில் கேளுங்கள். நேரம் கிடைப்பவர்கள் நள சரித்திரத்தை படியுங்கள் அல்லது படிக்கச் சொல்லி கேளுங்கள். (இது 2-மிட மற்றும் 10-மிட பார்வைக்காக). வன்னி மரத்தை வலமாக வந்து வழிபாடு செய்யுங்கள். இது எதுவுமே முடியாது என்றால் பௌர்ணமி நாளில் குபேர லிங்க தரிசனம் செய்யுங்கள். முடிந்தவரை "பிரதோஷம்" அன்று நந்தி, சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். (இது 5-மிட பார்வைக்காக). இந்தப் பரிகாரங்களை முடிந்தளவு செய்து நலம் பெறுங்கள்... நல்வாழ்த்துக்கள். நன்றி : விசுவய்யர் 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and #Prasna #Astrologer Specialist in #BLACK_MAGIC REMEDIES Near: Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா #வாராஹி #பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp: +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com #Astrologer_Blackmagic_specialist * 💐 * 💐 * #2024_November_03-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *

Message Us

other updates

Book Appointment

No services available for booking.

Select Staff

AnyBody

Morning
    Afternoon
      Evening
        Night
          Appointment Slot Unavailable
          Your enquiry
          Mobile or Email

          Appointment date & time

          Sunday, 7 Aug, 6:00 PM

          Your Name
          Mobile Number
          Email Id
          Message

          Balinese massage - 60 min

          INR 200

          INR 500

          services True True +918048055370