
அது டாட்டாவின் அலுவலகம். டாட்டா எதேச்சையாக கேமராவி...

அது டாட்டாவின் அலுவலகம். டாட்டா எதேச்சையாக கேமராவில் ஒரு நபரை பார்க்கிறார். உதவியாளரை அழைத்து... "யார் இந்த பையன் ஏன் உட்கார்ந்திருக்கிறார்?" என கேட்கிறார். "அவர் உங்கள் அப்பாயிண்மெண்ட் கேட்டு ஒரு மாதமாக தினமும் வந்து கொண்டிருக்கிறார்" என்றார் உதவியாளர். "அப்படியா அடுத்த வாரம் திங்கள் காலை 9-9.15 வரை. கால்மணி நேரம் அப்பாயிண்ட்மெண்ட் கூறி விடுங்கள்" என்கிறார். டாட்டாவுக்கு ஒவ்வொரு நொடியும் பணம். நேரத்தை வீணாக்க மாட்டார். அந்த இளைஞனுக்கு, ஒதுக்கப்பட்ட நேரம் தெரிவிக்கப்பட்டது. கொடுத்தது கால் மணி நேரம். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. "இதுவே எனக்கு அதிகமான நேரம்" என்ற இளைஞனை ஆச்சர்யமாக பார்த்தனர். குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. காலை 8.30க்கு அந்த இளைஞன் உள்ளே இருந்தான். 9 மணிக்கு அனுமதிக்கப்படுகிறான். இளைஞன்: குட் & க்ரேட் மார்னிங் சார். டாட்டா: மார்னிங். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தாய்...? இளைஞன்: ஒரு Business விசயமாக உங்களிடம் பேச வேண்டும். டாட்டா: என்ன Business? இளைஞன்: நீங்கள் உப்பு விற்க வேண்டும். டாட்டா: தம்பி என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி இருக்கிறது..? எவ்வளவு பெரிய தொழில்களை செய்து கொண்டு உள்ளேன். என்னை உப்பு விற்க சொல்லும் அளவு, அது பெரிய பொருளா...? இளைஞன்: சார். உப்பு சிறிய பொருள்தான். ஆனால் தினமும் பயன்படக் கூடியது. அது இல்லாமல் நீங்களோ நானோ உண்ணவே முடியாது. தினமும் பயன்படக் கூடியது. அடிக்கடி வாங்கப்படக் கூடியது. நமக்கு இவ்வளவு தொகைக்கு உப்பு கிடைக்கிறது. நாம் இவ்வளவு தொகைக்கு விற்கலாம். உங்கள் டாட்டா ப்ராண்டு என்றால், மக்கள் நம்பிக்கையோடு வாங்குவார்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் இங்கு வந்தேன். டாட்டா இரண்டு நிமிடம் யோசிக்கிறார். பின் இளைஞனிடம்... "சரி. காண்ட்ராக்டில் சைன் பண்ணி விட்டு, அட்வான்ஸ் பெற்றுக் கொள். நாளை மறுநாள் முதல், நம் உப்பு வெளிவர வேண்டும்." ஒரு மிகப் பெரிய ஒப்பந்தம் எப்படி கால் மணி நேரத்தில் முடிந்தது பாருங்கள். இரண்டு நிமிடத்தில் ஒரு மிகப் பெரிய ப்ராஜக்ட்டை, அதன் லாபத்தை டாட்டாவால் யூகிக்க முடிந்திருக்கிறது. அதுதான் வெற்றியின் ரகசியம். எந்த ஒரு முடிவையும் உடனே காலம் தாழ்த்தாமல் எடுப்பது. ஒருவேளை அந்த இளைஞனின் வார்த்தையை நிராகரித்திருந்தால் அவன் வேறு நிறுவனத்தை நாடியிருப்பான். வாய்ப்பு ஒருமுறை நம்மை தேடி வரும். அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது. புரிந்தவர்களுக்கு இது பாடம்... புரியாதவர்களுக்கு இது வெறும் கதை... புரிந்தவர்கள் வெற்றி பெறுங்கள். 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and #Prasna #Astrologer Specialist in #BLACK_MAGIC REMEDIES Near: Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா #வாராஹி #பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp: +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com #Astrologer_Blackmagic_specialist * 💐 * 💐 * #2024_October_17-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
