
இன்று மஹாபரணி.. எம தீபம் ஏற்றுங்கள்..!! மஹாபரணி ...
இன்று மஹாபரணி.. எம தீபம் ஏற்றுங்கள்..!! மஹாபரணி என்பது மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரமாகும். பரணி நட்சத்திரம் என்பது எமதர்மராஜனின் நட்சத்திரம் ஆகும். இந்நாளில் இறந்த நம் முன்னோர்களின் கர்மவினைக்கு ஏற்ப, எமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் செல்வார்கள் என்பது நியதி. எமதர்மனுக்கு உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் செய்வது மற்றும் எம தீபம் ஏற்றுவது போன்றவைகளை செய்தால் எமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்கு செல்ல வேண்டிய நம் முன்னோர்களின் வேதனையை குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார் என்பது ஐதீகம். எம தீபம் : மரணபயம் நம்மைவிட்டு அகலவும், துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் எமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மகாளய பட்சம் மற்றும் தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்வது மரபு. அவ்வாறு இக்காலத்தில் வருகை தரும் பித்ருக்களுக்கு அவர்கள் மீண்டும் திரும்பி செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது 'எம தீபம்' மட்டுமே. எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். முடியாதவர்கள் சுவாமிக்கு விளக்கேற்றும் போது, தனியே ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி, எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார் என்பது நம்பிக்கை. எம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. எம தீபம் ஏற்றினால் திருமணத் தடைகள் விலகும். குடும்பம் விருத்தியாகும். அனைத்துவித தடைகளும் நீங்கும். எம தீபத்தை மகாளய பட்சத்தில் வரும் மஹாபரணி நாளிலும், தீபாவளி காலத்தில் வரும் திரயோதசி திதியிலும் ஏற்ற வேண்டும். இவ்வாறு எம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது வருடம் முழுவதும் நல்ல பலன்களை தரும். வாழ்க வளமுடன்... 🙏* 💐 *🙏 ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள... சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் "ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_September_21-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
