
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மகிமைகளின் தொடர்ச்சி... ...

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மகிமைகளின் தொடர்ச்சி... குரு ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் அடைந்து பல வருடங்கள் கழித்து நிகழ்ந்த ஒரு அற்புதமான சம்பவம். இந்தியா, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த சமயத்தில், சென்னை Collector, அவருக்குக் கீழே பணிபுரியும் அதிகாரியான சர் தாமஸ் மன்றோ என்பவரை, மந்த்ராலயம் அனுப்பி, 'ஒரு சாமியாருக்கு எதற்கு இவ்வளவு பெரிய இடம்? அதனை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு அனுப்பி வைத்தார். மந்த்ராலயம் வந்த சர் தாமஸ் மன்றோ, தான் அணிந்து இருந்த தொப்பி மற்றும் காலணிகளை வெளியே கழற்றி விட்டு மரியாதையுடன் மூல பிருந்தாவன பகுதிக்கு உள்ளே சென்றார். அங்கே இருந்தவர்கள் பயந்தனர். மடத்தை பிடுங்கி விடுவார்கள் என்று கவலையுடன் வெளியே நின்றனர். ஆனால் அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அது என்னவென்றால் ? குரு ராகவேந்திர சுவாமிகள் சர் தாமஸ் மன்றோ மட்டும் பார்க்கும் படியாக தோன்றி, "தானம் தந்த பூமியை, அரசாங்கம் எடுத்துக் கொள்ள சட்டப்படி சாத்தியம் இல்லை" என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார். இதனைக் கேட்டு சமாதானம் அடைந்த தாமஸ் மன்றோ, சுவாமிகளிடம் அட்சதை பெற்றுக் கொண்டு வெளியே வந்தார். தூரத்தில் இருந்து பார்த்த மந்த்ராலய மடத்தை சார்ந்தவர்களுக்கு, உள்ளே சர் தாமஸ் மன்றோ ஆங்கிலத்தில் விவாதம் செய்ததை மட்டுமே பார்த்தனர். ஆனால் அவர்கள் கண்களுக்கு குருநாதர் தெரியவில்லை. மூல பிருந்தாவனத்தில் இருந்து வெளியே வந்த சர் தாமஸ் மன்றோ, "உள்ளே இருந்து சாமியார் தனது கேள்விக்கு சரியான பதிலை ஆங்கிலத்தில் சொன்னார்; அதில் நான் திருப்தி அடைந்து விட்டேன். மடம் ராகவேந்திர சுவாமிகளுக்குத்தான் சொந்தம். இதனை உத்தரவாக சென்னை Collector அவர்களிடம் வாங்கி தருகிறேன்" என்று கூறி விட்டு சென்னைக்கு புறப்பட்டார். மடத்து ஊழியர்கள் சர் தாமஸ் மன்றோவிடம், "தாங்கள் யாரிடம் பேசினீர்கள்?" என்று விசாரித்தனர். அதற்கு தாமஸ் மன்றோ, அங்கே மாட்டப்பட்டு இருந்த குரு ராகவேந்திர சுவாமிகளின் ஓவியத்தைப் பார்த்து "இவர்தான் உள்ளே இருந்து தன்னுடன் பேசினார்" என்று சொன்னார். இதனைக் கேட்டு அதிர்ந்த மடத்து ஊழியர்கள், "இவர்தான் குரு ராகவேந்திர சுவாமிகள், சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது" என்று சொன்னார்கள். இப்போது சர் தாமஸ் மன்றோ அதிர்ந்தார். அவர் மீண்டும் பிருந்தாவனம் உள்ளே சென்று பார்த்தபோது, ராகவேந்திர சுவாமிகள் அங்கே இல்லை என்று உறுதிப்படுத்தி கொண்ட அவர், அந்த சமயத்தில் இருந்து சுவாமிகளின் தீவிர பக்தரானார். சர் தாமஸ் மன்றோ அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மடத்து ஊழியர்கள் அனைவரும் சுவாமிகள் தங்களுக்கு காட்சி தராமல், ஒரு ஆங்கில அதிகாரிக்கு காட்சி தந்ததை எண்ணி வருந்தினர். அவர்கள் அனைவரும் உணவு உண்ணாமல், மந்த்ராலயத்தின் உள்ளே இருந்து போராட்டம் நிகழ்த்தும் விதமாக அங்கேயே தூங்கி போனார்கள். அவர்கள் அனைவரின் கனவிலும் ஒரே சமயத்தில் தோன்றிய ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், "வந்த ஆங்கிலேயர், ஸ்ரீ ராமர் காலத்தில் அவரது வானரப் படையில் இருந்தவர் என்பதால் அவருக்குக் காட்சி தந்தேன்; மற்றவர்கள் கண்களுக்கும் எனது உருவம் தெரிந்திருந்தால், தாமஸ் மன்றோவிற்கு இந்த மகிமை சாதாரணமாக இருந்திருக்கும்..." --என்று அவருக்கு மட்டுமே காட்சி தந்தமைக்கு விளக்கம் அளித்தார். இதன் பின்னரே அனைவரும் சமாதானம் அடைந்து கண்ணீர் பெருக்கி உணவை உண்டனர். சென்னை வந்த சர் தாமஸ் மன்றோ, தன் உயர் அதிகாரியிடம் நடந்தவற்றை எடுத்துச் சொன்னார். ஆனால் அதனை நம்ப மறுத்த சென்னை Collector, "நீ மடத்தில் பணம் வாங்கிக் கொண்டு மடத்திற்குச் சாதகமாக செயல்படுகிறாய்; இதனை Head Officeக்கு தெரியப்படுத்தி, உன்னை Dismiss செய்கிறேன்" என்று கொதித்தார். சர் தாமஸ் மன்றோ, குரு ராகவேந்திர சுவாமிகளிடம் பிரார்த்தனை செய்து விட்டு, தூங்கினார். காலையில் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால் Londonல் இருந்து வந்த உத்தரவுபடி, சர் தாமஸ் மன்றோ அவர்கள் தற்காலிக சென்னை கவர்னராக பதவி உயர்வு பெற்றார். சர் தாமஸ் மன்றோ, கவர்னராக பதவியேற்ற உடன், அவர் போட்ட முதல் கையெழுத்து மடத்திற்கு இடத்தை சாசனம் எழுதி தந்ததுதான். குரு ராகவேந்திர சுவாமிகளின் திருவடி பற்றி, சுவாமிகளின் வரலாறு மற்றும் சிறப்புகள் என்று, சுவாமிகள் எதனை எல்லாம் உணர்த்தினார்களோ அதனை பக்தர்களுக்கு மீண்டும் சமர்ப்பித்துள்ளோம். *ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ* *குருவே சரணம்* 🙏* 💐 *🙏* 💐 *🙏 ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும்... சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் "ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம்" அன்புடன் அழைக்கிறது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_August_28-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 * *
Subscribe for latest offers & updates
We hate spam too.
