
குரு ஸ்ரீ ராகவேந்திரரின் முன் அவதாரம் சங்கு கர்ணன...

குரு ஸ்ரீ ராகவேந்திரரின் முன் அவதாரம் சங்கு கர்ணன் என்ற தேவன், நாள்தோறும் பிரம்ம தேவருக்கு மலர்கள் பறித்துச் செல்ல பூலோகம் வருவது வழக்கம். அப்போது, ஒருநாள், அந்த மலர்களின் அழகில் லயித்து, இந்த பூவுலகில் பிறக்க வேண்டும் என்று தன் மனதில் நினைத்ததை அறிந்த பிரம்மதேவர், அவரை பூவுலகில் அரக்கர் வேந்தன் இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதனாய் பிறக்கும் வரமளித்தார். அரக்கன் இரண்ய கசிபுவை வதம் செய்ய விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்தார். தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். பாஹ்லிகர், மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும், ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார். தன் அடுத்த பிறவியில் வியாச ராயராய் பிறந்து ஸ்ரீமத்வரின் தத்துவத்தை சிரமேற்கொண்டார். அப்பிறவியில் தாம் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குரு ஸ்ரீ ராகவேந்திரராக அவதரித்தார். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் இளமையிலேயே மிகுந்த ஞானம் மிக்கவராக இருந்தார். அனைத்து கலைகளிலும் வித்தகராக இருந்தார். சுவாமிகள் ஒருமுறை பூஜைக்கு வேத பாராயணம் செய்ய சென்று இருந்தார். அங்கே இருந்தவர்கள் சுவாமிகளின் எளிமை கண்டு, சந்தனம் அரைக்கும்படி சொன்னார்கள். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த சுவாமிகள், சூரிய மந்திரம் படித்து சந்தனம் அரைத்து கொடுத்தார்கள். சுவாமிகள் அரைத்த சந்தனத்தை பூசிய அனைவருக்கும் உடல் முழுவதும் தீ வைத்தது போல சுட்டது. தன் தவற்றை உணர்ந்து சுவாமிகள் மீண்டும் சந்திரனின் மந்திரம் படித்து சந்தனம் அரைத்து தந்தார். அதனை பூசிய அனைவருக்கும் உடல் முழுவதும் குளிர்ந்தது. இதுதான் சுவாமியின் முதல் அற்புதம் ஆகும். தங்களின் தவற்றை உணர்ந்த அங்குள்ளவர்கள் சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டனர். 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_August_25-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
