
ஸ்ரீ ராகவேந்திர குரு ஸ்தோத்திரம் அருளிய வரலாற்று ப...

ஸ்ரீ ராகவேந்திர குரு ஸ்தோத்திரம் அருளிய வரலாற்று பின்னணி பற்றி தெரிந்து கொள்ளலாம். குரு ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன பிரவேசம் செய்ய திருவருள் கூடியதை உணர்ந்து, தன் அனுக்க தொண்டர் அப்பண்ணா அவர்களை அழைத்து, தான் பிருந்தாவன பிரவேசம் செய்ய போகின்ற தகவல்களை பலருக்கும் அறிவிக்க வேண்டி, துங்கபத்திரை ஆற்றின் அடுத்த கரைக்கு அப்பால் அனுப்பி வைத்தார். அப்பண்ணாசாரியார் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மேல் அளவற்ற அன்பு வைத்திருந்தார். தன் வாழ்நாள் முழுவதும் குருவிற்கு தொண்டு செய்வதையே தன் ஒரே பணியாக செய்து வந்தார். இத்தகைய அன்பு உள்ளம் கொண்ட அப்பண்ணாசாரியார் தன் அருகில் இருந்தால் பிருந்தாவன பிரவேசம் செய்யும் சமயத்தில் மிகுந்த வேதனைப்படுவார் என்றுதான் அவரை வெளியே அனுப்பி வைத்தார்கள். பலருக்கும் தகவல் சொல்லி விட்டு வந்த சமயத்தில்... அப்பண்ணாசாரியார் ஊருக்கு திரும்புகையில், துங்கபத்திரை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதனால் அவரால் இக்கரைக்கு வர முடியாமல் வருந்திய அவர், தன் குருநாதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை வணங்கி பாடியதுதான் இந்த குரு ஸ்தோத்திரம். இது சமஸ்கிருதத்தில் அருளியது, இதனை பாடத் துவங்கிய உடனே துங்கபத்திரை நதியின் நீர் விலகி வழிவிட்டது. அதில் அப்பண்ணாசாரியார் அவர்கள் நதியை கடந்து, வேகமாக ஓடி வந்தார். அதற்குள்ளே ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன பிரவேசம் அடைந்து விட்டார்கள். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் குரு ராகவேந்திர சுவாமிகள் மூல பிருந்தாவன பீடத்தில் காட்சி தந்து, தான் இங்கேயே இருப்பதாக சொல்லி ஆறுதல் படுத்தி மறைந்து அருளினார். இதுவே சுவாமிகள் பிருந்தாவன பிரவேசம் செய்த பிறகு செய்த முதல் அற்புதம். 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_August_22-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
