

ஆஷாட (வாராஹி) நவராத்ரி 06.07.2024 - 16.07.2024 கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே|| அன்னை ஸ்ரீ மகா வாராஹி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள். இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி). ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த வாக்கு வன்மை, தைரியம் தருவதோடு எதிர்ப்புகள், எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும். அபிச்சாரம் எனப்படும் பில்லி, சூனியம், ஏவல்களை நீக்குவாள். இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத் தேவையில்லை. எதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள். வழக்குகளில் வெற்றி தருபவள். மந்திர சாஸ்திர பழமொழி :- "வாராஹிக்காரனோடு வாதாடாதே"... ஸ்ரீ வாராஹி, வாக்கு சித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப் போலவே முதன்மையானவள் . எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக் கூடாது. அவை உடனே பலிக்கும். ஆனால் அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம், விரைவில் நம்மை வந்தே சேரும். அதில் இருந்து அன்னை நம்மைக் காக்க மாட்டாள். எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் ''எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு" வேண்டி வழிபட வேண்டும். ஸ்ரீ வாராஹி எலும்பின் அதி தேவதை. இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும், வாத, பித்த வியாதிகளும் தீரும். ஸ்ரீ மகா வாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும். வழிபாட்டு முறைகள் :- புதன், சனிக்கிழமைகள், திரயோதசி திதி, பஞ்சமி திதி, நவமி, திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம். எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம். ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி. அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன் பூஜிக்க, வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. செல்வம், அரசியல் வெற்றி, பதவி, புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும், மன வலிமை, ஆளுமை, எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபட வேண்டும். எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும், எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம். ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க, காரியத் தடைகள் நீங்கும். வெள்ளைப் பட்டு அணிவிக்க, வாக்கு வன்மை, கல்வியில் மேன்மை உண்டாகும். மஞ்சள் பட்டு அணிவிக்க, குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும், திருமணத் தடை நீங்கும். பச்சைப் பட்டு அணிவிக்கச, செல்வப் பெருக்கு ஏற்படும். நீல வண்ணப் பட்டு அணிவிக்க, எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும். ஸ்ரீ வாராஹி உபாசகர்கள், விளக்கிற்கு பஞ்சு, தாமரைத் தண்டு திரி, வாழைத் திரி பயன்படுத்தலாம். அதிலும் தாமரைத் தண்டு திரி மிகச் சிறந்தது. நைவேத்தியங்கள்:- தோல் எடுக்காத உளுந்து வடை, மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர் சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சை கற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை , சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன் படைக்கலாம். ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம்:- ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் || நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி || அந்தே அந்தினி நமஹா| ருந்தே ருந்தினி நமஹா| ஜம்பே ஜம்பினி நமஹா| மோஹே மோஹினி நமஹா | ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹா| சர்வ துஷ்ட பிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம், ஐம் க்லௌம் ட: ட: ட: ட: ஹூம் அஸ்த்ராய பட் || ஸ்ரீ மகா வாராஹியின் அங்க தேவதை - லகு வார்த்தாளி உபாங்க தேவதை - ஸ்வப்ன வாராஹி பிரத்யங்க தேவதை : திரஸ்கரணி ஸ்ரீ லகு வார்த்தாளி மூல மந்திரம் :- லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவி பாதுகாப்யாம் நமஹ|| இவள் ஸ்ரீ மகா வாராஹியின் அங்க தேவதை. ஸ்ரீ மஹா வாராஹி மந்திரம் ஜெபிக்க இயலாதவர்கள், லகு வாராஹி மந்திரத்தை ஜெபித்து வரலாம். இது எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாக விளங்கும். ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மூல மந்திரம் :- ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் ட்ட: ட்ட: ஸ்வாஹா|| அல்லது ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி அகோரே ஸ்வப்னம் தர்சய ட்ட: ட்ட: ஸ்வாஹா|| இவள் ஸ்ரீ மகா வாராஹியின் உபாங்க தேவதை. இவளை உபாசனை செய்தால் நமக்கு வரும் நன்மை, தீமைகளைக் கனவில் வந்து அறிவித்து நம்மைக் காப்பாள். இம்மந்திரத்தை நியமங்களுடன் உறங்கும் முன் 11 நாட்கள் தொடர்ந்து தினமும் 1100 முறை ஜெபித்து வந்தால், 11 நாட்களுக்குள் அன்னை ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி கனவில் வந்து, நம் மன விருப்பங்களை நிறைவேற்றி, பிரச்னைகளைத் தீர்ப்பாள். இவளுக்குப் பிடித்த நைவேத்யம் இளநீர். ஸ்ரீ திரஸ்கரணி மூல மந்திரம் :- ஓம் நமோ பகவதி திரஸ்கரணி மஹாமாயே| மஹாநித்ரே|சகலபசுஜன மனஸ் சக்ஷு ச்ரோத்ரம் திரஸ்கரணம் குரு குரு ஸ்வாஹா|| இவள் மாயைக்கு அதிபதி. இவளை வழிபட மாயை நீங்கும். மனக் குழப்பங்கள் தீரும். ஸ்ரீ வாராஹி தாயே... உன் திருவடி சரணம்! 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, *ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்* #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், Priest and Prasanna Astrologer, Specialist in Blackmagic REMEDIES CALL : +91-8939466099 WhatsApp : +91-9176185316 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com #World_renowned_Astrologer_in_India #Best_Astrologer_in_Chennai #near_by_me_astrologer #nearbyme_blackmagic #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2024_JULY_06-Panchangam-and-Planetary-position * 💐 * @GurujiDrArunRaghavendarPra9802
We hate spam too.